திருச்சி - ராமேசுவரம் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - ராமேசுவரம் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - ராமேசுவரம் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16849) வரும் செப். 2, 3, 4, 5, 10, 11, 12, 14, 16, 17, 18, 19, 21, 23, 24, 25, 26, 28, 29, 30 ஆம் தேதிகளில் ராமேசுவரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த ரயிலானது திருச்சி - மானாமதுரை வரை மட்டுமே இயங்கும்.

மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயிலானது (16850) மேற்கண்ட நாள்களில் மானாமதுரையிலிருந்து தினமும் மாலை 4.35 மணிக்கு புறப்படும்.

X
Dinamani
www.dinamani.com