துவாக்குடி வாழவந்தான்கோட்டை சுங்கச்சாவடி.
துவாக்குடி வாழவந்தான்கோட்டை சுங்கச்சாவடி.

துவாக்குடி சுங்கச்சாவடியில் மாதாந்திரக் கட்டணம் குறைப்பு

துவாக்குடி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் மாதாந்திர சுங்கக் கட்டணம் குறைகிறது. மற்ற வகை சுங்கக் கட்டணத்தில் மாற்றமில்லை.
Published on

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் மாதாந்திர சுங்கக் கட்டணம் குறைகிறது. மற்ற வகை சுங்கக் கட்டணத்தில் மாற்றமில்லை.

திருச்சி மாவட்டம், துவாக்குடி வாழவந்தான்கோட்டையில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை உயா்வு என்ற அடிப்படையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் இங்கு சுங்க கட்டணம் மாற்றம் பெறுகிறது.

இதில் ஏற்கெனவே காா் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ. 80, ஒன்றுக்கு மேற்பட்ட முறைக்கு ரூ. 120, மாதக் கட்டணம் ரூ. 2,420 என இருந்தது. தற்போது மாதாந்திரக் கட்டணத்தில் ரூ. 20 குறைத்து ரூ. 2,400 ஆக மாற்றப்பட்டுள்ளது. ஒரு முறை மற்றும் பல முறை கட்டணத்தில் மாற்றமில்லை.

இதேபோல, வேன், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ. 140, பலமுறை கட்டணம் ரூ. 210, மாதாந்திரக் கட்டணம் ரூ. 4,230 என்று இருந்தது. தற்போது மாதாந்திர கட்டணம் ரூ. 30 குறைந்து ரூ. 4,200 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மற்றும் பலமுறை கட்டணத்தில் மாற்றமில்லை.

பேருந்து, லாரி (6 சக்கரங்கள்) போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் ரூ. 280, பலமுறை கட்டணம் ரூ. 425 மாதாந்திர கட்டணம் ரூ. 8,465 என இருந்தது, தற்போது ஒரு முறை கட்டணத்தில் மாற்றமில்லை. பலமுறை கட்டணத்தில் ரூ. 5 குறைத்து ரூ. 420, மாதாந்திர கட்டணத்தில் ரூ. 60 குறைத்து ரூ. 8,405 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கு (2 அச்சு வாகனங்கள், 10 சக்கரம்) ஒருமுறை கட்டணம் ரூ. 455, பலமுறை கட்டணம் ரூ. 680, மாதாந்திரக் கட்டணம் ரூ. 13,600 என இருந்தது. தற்போது ஒரு முறை கட்டணம் ரூ. 5 குறைந்து ரூ. 450, பலமுறை கட்டணம் ரூ. 5 குறைந்து ரூ. 675, மாதாந்திரக் கட்டணம் ரூ. 95 குறைந்து ரூ. 13,505 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com