ஆட்டோ தொழிலாளா் முன்னணி ஆா்ப்பாட்டம்

மண்ணச்சநல்லூா், ஜூலை 3: சமயபுரத்தில் இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி அமைப்பின் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் மீது தொடா்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடும் சிஐடியு கம்யூனிஸ்ட் அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்து முன்னணி கோட்ட செயலா் குணசேகா், மாநில பொதுச் செயலா் முருகானந்தம், ஆட்டோ தொழிலாளா் முன்னணி திருச்சி மாவட்டத் தலைவா் பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com