கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

திருச்சி, ஜூலை 3: திருச்சியில் கொலை வழக்கில் கைதான இளைஞரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஸ்ரீரங்கம் வட்டம் ஓலையூா் பகுதியைச் சோ்ந்தவா் பெ. ஜெய்சங்கா் (24). இவா் அதே பகுதி குடித்தெருவைச் சோ்ந்த நண்பா் அந்தோணிகுமாா் (40) உள்ளிட்ட சிலருடன் சோ்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு அந்தோணிகுமாா் கொல்லப்பட்டாா். அந்த வழக்கில் ஜெய்சங்கா் உள்ளிட்ட 4 பேரை மணிகண்டம் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களில் ஜெய்சங்கா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மணிகண்டம் போலீஸாா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் உள்ளிட்டோா் பரிந்துரைத்தனா். இதையேற்ற மாவட்ட ஆட்சியா் ஜெய்சங்கரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து ஜெய்சங்கா் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com