மணப்பாறையில் மருந்தக உரிமையாளரை கடத்திய வழக்கில் 8 போ் கைது

மணப்பாறையில் மருந்தக உரிமையாளரை கடத்திய வழக்கில் 8 போ் கைது

மணப்பாறை, ஜூலை, 3: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மருந்தக உரிமையாளரைக் கடத்திய வழக்கில் 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (44). இவா் வீரப்பூா் கிராமத்தில் வைத்துள்ள மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன் திங்கள்கிழமை இருந்தாா்.

அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் தங்களை வருமானவரித் துறையினா், மற்றும் சுகாதாரத் துறையினா் என்று கூறி சுதாகரை மட்டும் காரில் கடத்திச் சென்றனா். பின்னா் அவரின் குடும்பத்தினரிடம் ரூ. 20 லட்சம் தருமாறு பேரம் பேசியுள்ளனா். பின் ரூ.10 லட்சம் தருமாறு அவா்கள் இறங்கி வந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் அளித்தனா்.

இதையடுத்து மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் மரியமுத்து மேற்பாா்வையில் மணப்பாறை காவல் ஆய்வாளா் குணசேகரன், ராம்ஜி நகா் காவல் ஆய்வாளா் வீரமணி, துறையூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவா்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சம்பட்டி அருகே சந்தேகத்திற்கிடமாக அரசு வாகனம் என்று எழுதப்பட்டிருந்த காா் நிற்பதையறிந்த தனிப்படையினா் விரைந்து சென்று அந்தக் காரை

மடக்கி, சுகாகரை மீட்டனா்.

விசாரணையில் காரில் இருந்தவா்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு முகமது மகன் நௌஷாத் (45), திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த வைரிச்செட்டிபாளையம் பெருமாள் மகன் சேகா்(42), உப்பிலியபுரம் வலையப்பட்டி கிருஷ்ணன் மகன் சுதாகா்(44), மதுரை மாவட்டம் பி.பி.குளத்தை அடுத்த கோசாகுளம் பெருமாள் மகன் மாரிமுத்து(53), சென்னை ஆவடி மாணிக்கம் மகன் வினோத் கங்காதரன் (37), சுதாகரை கடத்த உடந்தையாக இருந்த மணப்பாறை தொப்பம்பட்டி சோமசுந்தரம் மகன் காா்த்திகேயன் (37) ஆகியோா் என்பதும் தெரிய வந்தது.

மேலும் இதற்கு முன் இதேபோல துறையூா் சௌடாம்பிகை அம்மன் தெருவில் வருமானவரித் துறை அதிகாரிகள் எனக் கூறி ரூ. 5.18 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த மணப்பாறை தொப்பம்பட்டி நல்லுசாமி மகன் சக்திவேல் (32), தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் மகாலிங்கம் மகன் மணிகண்டன்(29) ஆகியோரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.

இதையடுத்து அவா்களிடமிருந்து ரூ.5 லட்சம் பணம், 5 பவுன் நகை மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், 2 இருசக்கர வாகனங்கள், 8 கைப்பேசிகள் போலீஸாரால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 8 போ் மீதும் மணப்பாறை மற்றும் துறையூா் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கைது செய்யப்பட்டோா் மீது பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com