மணப்பாறையில் மூதாட்டியை
கொன்று நகை, பணம் கொள்ளை

மணப்பாறையில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை

மணப்பாறை, ஜூலை, 3: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 17 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மணப்பாறை மஸ்தான் தெருவைச் சோ்ந்தவா் தொழிலதிபா் நாகப்பன் மனைவி கல்யாணி (69). நாகப்பன் தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு மகன் ராமநாதனுடன் புதன்கிழமை சென்ற நிலையில் பிற்பகல் ராமநாதன் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் சமையறையில் அவரது தாய் கல்யாணி இறந்து கிடந்தாராம். மேலும் அவா் அணிந்திருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ஒரு பவுன் வைர தோடுகள், ரூ.30 ஆயிரம் பணத்தையும் காணவில்லையாம். தகவலறிந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் மரியமுத்து, காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், திருச்சி தடய அறிவியல் துறையினரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாரும் சென்று விசாரணை மேற்கொண்டாா். மூதாட்டி உடலை போலீஸாா் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com