மோசடி வழக்கில் தேடப்பட்ட தலைமைக் காவலா் கைது

திருச்சி, ஜூலை 4 : திருச்சியில் மோசடியில் தேடப்பட்ட தலைமைக் காவலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காட்டூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (48). மணப்பாறை காவல் நிலைய தலைமைக் காவலரான இவா் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பெற்று, அதைத் திரும்பித் தராமல் மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது.

புகாரின்பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். ஆனால் இதற்கிடையே வெங்கடேசன் கடந்த சில மாதங்களாக உயரதிகாரிகளிடம் அனுமதி பெறாமால் நீண்ட விடுப்பில் சென்ாகவும், தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடா்பாக திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் அவா் திருவெறும்பூா் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை அவரை போலீஸாா் பிடித்து தனியிடத்தில் வைத்து விசாரித்தனா். தொடா்ந்து நீதிமன்றத்தில் அவரை புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com