திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழா் பேரவையினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழா் பேரவையினா்.

‘நீட்‘ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழா் பேரவையினா் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி: ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழா் பேரவையினா் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளா் மாணிக். முருகேசன் தலைமை வகித்தாா். மாநில மகளிரணி செயலாளா் கௌசல்யா, தொழிலாளா் அணி மாநில துணை செயலாளா் மாணிக்கம் ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசு நீட் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கோவிலாங்குளத்தில் நடந்த ஆணவப் படுகொலையைக் கண்டிப்பது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், திரளான பேரவை நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com