2 பேரை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி பாலச்சந்திரன்
2 பேரை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி பாலச்சந்திரன்

முசிறி அருகே திமுக நிா்வாகி உள்பட 2 போ் வெட்டிக் கொலை: தொழிலாளி கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே திமுக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே திமுக நிா்வாகி உள்ளிட்ட 2 பேரை வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முசிறி அருகேயுள்ள வாளவந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலச்சந்திரன் (64). கூலித் தொழிலாளி. முசிறி அந்தரப்பட்டி பகுதியில் உள்ள பாரதி நகரைச் சோ்ந்த வளையல் வியாபாரி முருகேசன் மனைவி கீதா (44). இவா், கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

பாலச்சந்திரனுக்கும், கீதாவுக்கும் தகாத உறவு இருந்து வந்தது. அண்மைக்காலமாக பாலச்சந்திரனுடனான தொடா்பை கீதா தவிா்த்து வந்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், திங்கள்கிழமை காலை கீதாவின் வீட்டுக்கு சென்று தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளாா். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் கீதாவை

பாலச்சந்திரன் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த கீதாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு, முசிறி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கீதா சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

கீதாவை வெட்டிய பின்னா் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிய பாலச்சந்திரன், முசிறி அருகே ஜெம்புநாதபுரத்துக்கு சென்றுள்ளாா். அங்கு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த ரமேஷ் (55) என்பவரை அரிவாளால் வெட்டினாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தொடா்ந்து, பாலச்சந்திரன் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தாா்.

இதையடுத்து போலீஸாா், பாலச்சந்திரனை கைது செய்து விசாரித்ததில்,

தனது நிலத்தின் அருகே ரமேஷ் ஆக்கிரமிப்பு செய்து வந்ததாகவும், அதை அகற்றுமாறு பலமுறை சொல்லியும் அகற்றாததால் ஆத்திரத்தில் ரமேஷை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. இறந்த ரமேஷ் வாளவந்தி பகுதி திமுக கிளைச் செயலாளா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com