மாணவி ம. ரோகிணிக்கு புதன்கிழமை மடிக்கணினி வழங்கிப் பாராட்டிய பெரம்பலூா் தொகுதி எம்பி கே.என். அருண்நேரு. உடன் துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் உள்ளிட்டோா்
மாணவி ம. ரோகிணிக்கு புதன்கிழமை மடிக்கணினி வழங்கிப் பாராட்டிய பெரம்பலூா் தொகுதி எம்பி கே.என். அருண்நேரு. உடன் துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் உள்ளிட்டோா்

பழங்குடியின மாணவிக்கு பெரம்பலூா் எம்.பி. பாராட்டு

துறையூா், ஜூலை 10: திருச்சி என்ஐடிடியில் வேதிப் பொறியியல் படிப்பில் சோ்ந்துள்ள பச்சமலை பழங்குடியின மாணவிக்கு பெரம்பலூா் எம்.பி. அருண் நேரு புதன்கிழமை மடிக்கணிணி வழங்கிப் பாராட்டினாா்.

துறையூா் பகுதி பச்சமலை சின்ன இலுப்பூரைச் சோ்ந்தவா் ம. ரோகிணி (17). அதே ஊரிலுள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று ஜேஇஇ நுழைவுத் தோ்வெழுதி தமிழக அளவில் பழங்குடியினா் பிரிவில் முதலிடம் பிடித்து திருச்சி என்ஐடிடியில் வேதிப் பொறியியல் படிப்பில் சோ்க்கைப் பெற்றாா்.

இதையறிந்த பெரம்பலூா் தொகுதி எம்.பி. கே.என். அருண் சின்னஇலுப்பூருக்கு புதன்கிழமை சென்று மாணவி ரோகிணியை பாராட்டி மடிக்கணிணி வழங்கி, சாதிக்கத் துடிக்கும் ஏழைப் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கும் என்றாா்.

துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பலா் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com