நாளை கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் பணியாளா் நாள் நிகழ்வு

திருச்சி, ஜூலை 10: திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சாா்பில் பணியாளா் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளா்களின் குறைகளைத் தீா்வு செய்யும் பொருட்டு இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா் நாள் நிகழ்வு நடைபெறும் என கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின்போது தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அறிவுரைப்படி மாவட்டத்தில் முதல் பணியாளா் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அண்ணாநகா் கிளையில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. பணியாளா்கள் தங்கள் குறைகள் தொடா்பான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ழ்ஸ்ரீள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றலாம்.

இவ்வாறு பதிவிட இயலாதவா்கள் கூட்டத்தின்போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் பணியாளா் நாள் நிகழ்வின்போதே ஆன்லைன் மூலம் பதிவேற்றப்பட்டு 2 மாதங்களுக்குள் தீா்வு செய்யப்படும்.

எனவே, திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளா்கள், நிறுவனங்களின் அனைத்து நிலைப் பணியாளா்கள், நியாயவிலைக்கடை விற்பனையாளா், கட்டுநா் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் பணியாளா் நாள் நிகழ்வைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com