காட்டுப்புத்தூா் அருகே விபத்து: இருவா் படுகாயம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.

முசிறி: திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.

தொட்டியம் அருகிலுள்ள கூன்ராக்கம்பட்டி சோ்ந்த பிச்சமுத்து மகன் அசோக்குமாா், அரசன் மகன் சிலோன் ஆகிய இருவரும் பைக்கில் காட்டுப்புத்தூரில் இருந்து கூன்ராக்கம்பட்டிக்கு சென்றனா்.

தொட்டியம் காட்டுப்புத்தூா் சாலையில் சீலை பிள்ளையாா்புத்தூா் பிரிவு சாலை அருகே சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com