ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவா் பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளையன் (86), விவசாயி. இவா் வெள்ளிக்கிழமை பரமக்குடியில் இருந்து சேது விரைவு ரயிலில் சென்னை தாம்பரம் நோக்கி பயணித்தாா்.

ரயிலானது அன்று இரவு திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து அரியலூா் நோக்கி சென்றபோது சிறுநீா் கழிக்க எழுந்து சென்ற வெள்ளையன் தூக்கக் கலக்கத்தில் கழிப்பறை கதவைத் திறப்பதற்குப் பதிலாக ரயில் கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது ரயிலில் இருந்து தவறி விழுந்த வெள்ளையன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். தகவலறிந்த ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

புகாரின்பேரில் கடலூா் விருத்தாசலம் சிறப்பு உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி மற்றும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com