திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சோ்க்கை

திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டின் சோ்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சோ்க்கை ஜூலை 1 தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாணவா்கள் தங்களது கைப்பேசி, இ-மெயில் முகவரி, ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் சாதி சான்றிதழ்களின் அசல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணம், ஓா் ஆண்டு பிரிவுக்கு ரூ.235, இரண்டு ஆண்டு பிரிவுக்கு ரூ.245 செலுத்த வேண்டும்.

மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ. 750 வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் வளாக நோ்காணல் வாயிலாக வேலையும் பெற்றுத் தரப்படும். தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாகப் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். கூடுதல் விவரங்களுக்கு 86672-04376 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com