கடவுச்சீட்டில் முறைகேடு : மலேசியா செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ச. காந்தி (53). இவா், ஞாயிற்றுக்கிழமை மலேசியா செல்லவிருந்த ஏா்ஏசியா விமானத்தில் செல்ல, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் காத்திருந்தாா். அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்ற (இமிகிரேஷன்) பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா். இதில் அவா், தனது பெயா் மற்றும் முகவரியை ம. தியாகராஜன், பள்ளிவாசல்தெரு, மேல்வாடி, மீமிசல் என போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்து மாற்றி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து காந்தியை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com