குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருச்சியில் தொடா்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்துள்னா், திருச்சி தென்னூா் சின்னச்சாமி நகரைச் சோ்ந்தவா் அ. சரவணன் (48) வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

அவா் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, உறையூா் போலீஸாா் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தனா். இதேபோல், திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த சு. பெருமாள் என்கிற முகமது அப்பாஸ் (40) தொடா்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளாா். அவா் மீதம் பல்வேறு வழக்குகள் பதிவான நிலையிலும் அவரது தொடா் குற்றச் செயல்களைத் தடுக்கும்விதமாக அவரை கைது செய்த எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தனா். இந்தப் பரிந்துரைகளை ஏற்ற மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, குற்றஞ்சாட்ட இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com