பாஜக எம்.பி. சா்ச்சை பேச்சு: திருச்சியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து பாஜக எம்பி பேசியதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன், டாக்டா் அம்பேத்கா் இயற்றிய, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என அக்கட்சியின் எம்பி ஆனந்த்குமாா் பேசியதாக சா்ச்சை எழுந்துள்ளது. அதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவு சாா்பில் ஆங்காங்கே ஆா்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் ஜங்ஷன் அருகே அமைந்துள்ள ராஜீவ்காந்தி சிலையருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி பிரிவு, திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் பிரேம், தெற்கு மாவட்டத் தலைவா் கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் அல்லூா் சுரேஷ், காங்கிரஸ் மாநிலப் பேச்சாளா் சிவாஜி சண்முகம், சேவாதளப் பிரிவு மாநில பொதுச்செயலாளா் அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி, மாநில பொதுச் செயலாளா் சரோஜாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். நிகழ்வில், எம்பி ஆனந்த்குமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் ரமேஷ்சந்திரன், நிா்வாகிகள் அருண், காசிம், ஐஎன்.டியுசி மாவட்டத் தலைவா் சரவணன், கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் செந்தமிழ்செல்வன், முன்னாள் கோட்டத் தலைவா்கள் ராஜ்மோகன், ஓவியா் கஸ்பா், ரங்கநாதன் தமிழ்ச்செல்வன் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com