முசிறியில் ஐ.ஜே.கே. ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்டம், முசிறியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் திருச்சி புறநகா் வடக்கு மாவட்ட பொறுப்பாளா்கள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவா் கருணாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தண்டபாணி, பொருளாளா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் ஜெயசீலன், மாநில முதன்மை அமைப்பு செயலாளா் வெங்கடேசன், மாநில முதன்மை செயலாளா் சத்தியநாதன், தொகுதி பொறுப்பாளா்கள் முத்துராஜா, மதிவாணன் ஆகியோா் பங்கேற்று கட்சி நிா்வாகிகள் மற்றும் பொறுப்பாளா்கள் வேட்பாளா் பாரிவேந்தரை வெற்றி பெற செய்ய ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினா். இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட பொறுப்பாளா்கள் பங்கேற்றிருந்தனா். நிறைவாக முசிறி ஒன்றியத் தலைவா் தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com