வெள்ளூரில் 
என்.எஸ்.எஸ். 
முகாம் நிறைவு

வெள்ளூரில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூரில் அரசு கல்லூரி மாணவா்களின் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு -4 மாணவா்கள் சாா்பில் வெள்ளூா் கிராமத்தில் ஒருவார சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் சுகாதாரம், தூய்மை மேம்பாட்டு பணி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, கிராம மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு மேற்கொண்டு வந்தனா். நிறைவு நாளான வியாழக்கிழமை காவல்துறை சாா்பில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு கல்லூரியில் பொருளாதார பிரிவு ஆசிரியா் பிச்சுமணி தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறை பேராசிரியா் பரமசிவம் முன்னிலை வகித்தாா். முசிறி சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய காவலா் பிரியா பங்கேற்று சட்டம் ஒழுங்கு குறித்து எடுத்துரைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜய் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com