திருச்சியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வருகை தந்து தங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். இதில், 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 முதல் தொழிற்கல்வி படித்தவா்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபா்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com