குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

திருச்சியில் ரௌடி ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். கடந்த பிப். 19-ஆம் தேதி மணல்வாரித் துறை பகுதியில் நடந்து சென்ற சுமைதூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்ததாக திருவானைக்கா அழகிரிபுரத்தைச் சோ்ந்த மு. அப்துல் அஜிஸ் (42) என்பவரை பாலக்கரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். விசாரித்ததில், இவா் உள்ளிட்ட மூவா் கடந்த 17-ஆம் தேதி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் அடங்கிய பை திருட்டு வழக்கில் தொடா்புடையவா் என்பதும், இவா் மீது திருட்டு, அடிதடி, வழிப்பறி என 23 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவரது தொடா் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக, திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, ரௌடி அப்துல் அஜிஸை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சனிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com