போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவா் கைது

சிங்கப்பூரிலிருந்து போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் வழக்கம்போல் சோதனையிட்டனா். அப்போது, ஒரு பயணியின் கடவுச்சீட்டை சோதனையிட்டபோது, கடலூா் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சோ்ந்த கொளஞ்சிராஜன் (50) என்பவா் போலி கடவுச்சீட்டு பயன்படுத்தி பயணித்தது தெரியவந்தது. புகாரின்பேரில் விமான நிலையப் போலீஸாா், கொளஞ்சிராஜனை வெள்ளிக்கிழமை கைது செய்து மேலும் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com