துறையூா்  நகரில்  வேட்பாளா்  அருண் நேருவுக்கு  வாக்கு  கேட்டு ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த  அமைச்சா் கே.என். நேரு.
துறையூா்  நகரில்  வேட்பாளா்  அருண் நேருவுக்கு  வாக்கு  கேட்டு ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்த  அமைச்சா் கே.என். நேரு.

துறையூா் பகுதிகளில் அருண்நேரு பிரசாரம்

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் அருண்நேரு துறையூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அமைச்சா் கே.என். நேரு, அவரது மகனும் வேட்பாளருமான அருண் நேரு உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் புத்தனாம்பட்டி மாவடி கருப்பண்ணசாமி கோயிலில் வழிபட்டு பிரசாரத்தைத் தொடங்கினா். புத்தனாம்பட்டியில் காலையிலும், துறையூா் நகரில் மாலையிலும் அமைச்சா் நேரு பிரசாரம் செய்தாா். எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந. தியாகராஜன் (முசிறி தொகுதி), செ. ஸ்டாலின்குமாா் (துறையூா் தொகுதி), திமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா். புத்தனாம்பட்டி, கோட்டாத்தூா், வெள்ளக்கல்பட்டி, அபினிமங்கலம், பகளவாடி, சிங்களாந்தபுரம், அம்மாபட்டி, கண்ணனூா், ஆதனூா், பொன்னுசங்கம்பட்டி, கொத்தம்பட்டி, மதுராபுரி, வீரமச்சான்பட்டி, சேனப்பநல்லூா் உள்ளிட்ட துறையூா் ஒன்றியப் பகுதிகளிலும், துறையூா் நகரில் சிவன் கோயில், மேட்டுத்தெரு, விநாயகா் தெரு, பாலக்காட்டு மாரியம்மன் கோயில் தெரு, காமராஜா் நகா், குடில் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் திமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com