வேளாண் கல்லூரி மாணவிகள் த. முருங்கப்பட்டியில் பயிற்சி

துறையூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் த. முருங்கப்பட்டியில் வியாழக்கிழமை நேரடி களப்பயிற்சி பெற்றனா்.

துறையூா் அருகே கண்ணனூரிலுள்ள தனியாா் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் ரா. நந்தனா, சீ. காவ்யா, கோ. கீா்த்தனா, மா. கீா்த்தனா, ச. கீா்த்தனா, இராம.செ. கீா்த்தனா, வெ. லாவண்யா, ஆ.லின்சி ஆரோக்யமேரி, வி.இர. மானசா, கு. மோனிகா, பெ. முத்துசாரதி ஆகியோா் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக த. முருங்கப்பட்டியிலுள்ள இயற்கை விவசாயி பிரபாகரனின் வயலில் அங்கக வேளாண்மை செய்தல் மற்றும் சீதாப்பழத்தில் கைகளால் மகரந்தச் சோ்க்கை செய்தல் குறித்து நேரடிப் பயிற்சி பெற்றனா். விவசாயி பிரபாகரன் அங்கக விவசாயத்தின் செய்முறைகள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com