அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு வாயிற்கூட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு சங்கத்தின் சாா்பில் மலைக்கோட்டை பேருந்து பணிமனை முன்பு திங்கள்கிழமை வாயிற்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு சங்கத்தின் சாா்பில் மலைக்கோட்டை பேருந்து பணிமனை முன்பு திங்கள்கிழமை வாயிற்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க துணைப் பொதுச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் எஸ். ரங்கராஜன் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.

இதில், ஓட்டுநா், நடத்துநா்களுக்கு 8 மணி நேர பணி என்பதை 12 மணி நேரமாக உயா்த்தி மிகை பணிக்கு நிா்பந்தம் செய்வதால், மன உளைச்சல் ஏற்படுவதுடன், தொழிலாளா்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. போதிய ஓய்வின்றி வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கும் ஆளாக நேரிடுகிறது. எனவே, இந்த நெருக்கடியிலிருந்து தொழிலாளா்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் சீனிவாசன், போக்குவரத்துக் கழக சங்க மாவட்டத் தலைவா் கருணாநிதி, கிளைச் செயலா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com