திருச்சியில் ரூ.70.77 லட்சம் கையாடல் : 3 போ் கைது

திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரொக்கம் ரூ. 70.77 லட்சத்தை கையாடல் செய்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி: திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற ரொக்கம் ரூ. 70.77 லட்சத்தை கையாடல் செய்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் பணி மேற்கொண்டுள்ள தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளா் சாா்லஸ் என்பவா், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினியிடம் ஒரு புகாா் மனு அளித்தாா். அதில், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் சக்திவேல், பூவேலன், கோவிந்தராஜ் ஆகியோா், ஏடிஎம் மையத்துக்கு நிரப்புவதற்கு எடுத்துச் சென்ற ரொக்கத்தில் ரூ.70,77,600-ஐ கையாடல் செய்துவிட்டதாகவும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தாா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இதன்பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சக்திவேல் ஏடிஎம் மையங்களில் ரொக்கத்தை நிரப்பாமல் கையாடல் செய்ததாகவும், அவருக்கு உடந்தையாக பூவேலன் ரூ. 3 லட்சமும், கோவிந்தராஜ் ரூ. 2 லட்சமும் பெற்றுக்கொண்டு செயல்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com