அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற டிராக்டா் பறிமுதல்

துறையூா் அருகே ஏரியிலிருந்து அனுமதியின்றி மண் எடுத்துச் சென்ற டிராக்டரை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துறையூா் அருகே உள்ள அம்மாப்பட்டியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் செல்வகுமாா்(35). இவா் வெள்ளிக்கிழமை சிங்களாந்தபுரம் ஏரியிலிருந்து மண்ணை டிராக்டரில் எடுத்துக் கொண்டு காளிப்பட்டி - அம்மாப்பட்டி சாலையில் சென்றாா். அப்போது அந்தப் பகுதியில் ரோந்த சென்ற திருச்சி மாவட்ட புவியியல் துறை உதவி இயக்குநா் பாலமுருகன், டிராக்டரை சோதனையிட்டபோது 3 யூனிட் ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து துறையூா் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில்துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வகுமாரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com