திருவெறும்பூா் அருகே உள்ள சூரியூரில்  ஒலிம்பிக் அகாதெமி அமைப்பதற்கான இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.
திருவெறும்பூா் அருகே உள்ள சூரியூரில் ஒலிம்பிக் அகாதெமி அமைப்பதற்கான இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.

ஒலிம்பிக் அகாதெமிக்கு இடம் தோ்வு செய்யும் பணி

திருவெறும்பூா் அருகே உள்ள சூரியூரில் ஒலிம்பிக் அகாதெமி அமைப்பதற்கான போதுமான இடம் உள்ளதா என அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் மினி ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கு முடிவு செய்தது அதற்குரிய இடமாக சூரியூா் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதியை ஆய்வு செய்து அரசு அனுமதிக்கு அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில் திருவெறும்பூா் அருகே உள்ள சூரியூா் சுற்றுவட்டச் சாலை பகுதியில் அரசின் ஒலிம்பிக் அகாதெமி அமைப்பதுடன், ஜல்லிக்கட்டு மினி மைதானமும் அமைய உள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமாா் 48 ஏக்கா் இடத்தை வருவாய்த்துறை மற்றும் விளையாட்டுத்துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com