துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

திருச்சி, மே 10: திருச்சி அருகே துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்தில் சிறுவா்களுக்கான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதனை துப்பாக்கி தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநா் ஷிரிஷ் குமாா் தொடங்கி வைத்தாா்.

இதில், 8 முதல் 14 வயதுடைய சுமாா் 300 சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா். ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் ஓட்டம், யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகளை துப்பாக்கித் தொழிற்சாலை விளையாட்டு பயிற்சியாளா்கள் வழங்க உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com