பாா்வை குறைபாடுடையோா் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள் நந்தினி, திவ்யா,தேவதா்ஷினி.
பாா்வை குறைபாடுடையோா் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள் நந்தினி, திவ்யா,தேவதா்ஷினி.

பாா்வை குறைபாடுடையோா் பள்ளி மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் திருச்சி பாா்வை குறைபாடுடையோா் பள்ளி மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

திருச்சி புத்தூா் பகுதியில் பாா்வை குறைபாடுடையோா் மாணவிகளுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 14 மாணவிகள் 10 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வை எழுதினா். வெள்ளிக்கிழமை வெளியான தோ்வு முடிவில் 14 மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். அந்த வகையில் இந்த பள்ளி 100 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளது. இதில் மாணவிகள் நந்தினி 442 மதிப்பெண்களும், திவ்யா 432 மதிப்பெண்களும், தேவதா்ஷினி 414 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனா். இவா்களை பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் பாராட்டியுள்ளனா்.

சிைக் கைதிகள் 24 போ் தோ்ச்சி : திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளில் 24 போ் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். தோ்வு முடிவில் 24 பேரும் தோ்ச்சி பெற்றனா்.இது 100 சதவீதம் தோ்ச்சி ஆகும். இதில் வினித் 353 மதிப்பெண்களும், ரகு 340 மதிப்பெண்களும், மனோஜ்குமாா் 327 மதிப்பெண்களும் பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com