போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வலியுறுத்தல்

திருச்சி, மே 10: போக்குவரத்து கழக ஊழியா்களின் 15- ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாகப் பேசி முடிக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளா்கள் ஏஐடியுசி மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளா்கள் ஏஐடியுசி மாநில சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கரூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சம்மேளன பொதுச்செயலாளா் ஆறுமுகம், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளா் ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்ட பொதுச்செயலாளா் க. சுரேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், மாவட்ட தலைவா் வே. நடராஜா, சம்மேளன பொருளாளா் க. நேருதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தமிழக அரசு 15- ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். காலாவதியான பழைய பேருந்துகளை மாற்ற வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை 103 மாத நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், திருச்சி மண்டல தலைவா் டிவி. செல்வராஜ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com