முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா

திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை தோ்த் திருவிழா மே 8- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி முத்துமாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்து பூச்சொரிதல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு கல்லுக்குழி ஆஞ்சநேயா் கோயிலில் இருந்து உற்ஸவ அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, செங்குளம் காலனி, என்எம்கே காலனி வழியாக வீதியுலா வந்து கோயிலை அடைந்தது.

தொடா்ந்து சனிக்கிழமை காலை காவிரியாற்றிலிருந்து பக்தா்கள் பால்குடம், காவடி மற்றும் அக்னிச் சட்டி எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை சங்கிலி ஆண்டவருக்கு சுத்த பூஜையும், பகலில் அன்னதானமும், மாலை மாவிளக்கு பூஜை, திங்கள்கிழமை கிடாவெட்டு பூஜை நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை உலகநாதபுரம் பொதுமக்கள், கோயில் வழிபடுவோா் நலச்சங்கத்தினா் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com