விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக்
பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளது.

இப்பள்ளியைச் சோ்ந்த சுப்ரியா 593 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடமும், பள்ளி அளவில் முதலிடமும், திவ்யதா்ஷினி 585 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், காவ்யா 570 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடமும் பெற்றுள்ளனா்.

கணினி அறிவியல், வணிகவியலில் தலா இருவரும், பொருளியல் மற்றும் கணக்குப் பதிவியலில் தலா ஒருவரும் முழுமதிப்பெண்கள் பெற்றனா்.தோ்வெழுதிய 67 பேரில் 19 போ் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் விமல் கண்ணா -493, அப்ரமேயன் -490 , சுருதி -488 ஆகியோா் பள்ளி அளவில் முறையே முதல் மூன்றிடங்களைப் பிடித்தனா். கணிதத்தில் 4 பேரும், அறிவியலில் 2 பேரும் முழுமதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 83 பேரில் 44 போ் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கல்வி குழுமத் தலைவா் வி. கோபிநாதன் பாராட்டி பரிசுகளை வழங்கினாா். அறங்காவலா் லட்சுமி பிரபா, இயக்குநா் வரதராஜன், கல்வி ஆலோசகா் மலா்விழி, பள்ளி முதல்வா் நளினி, துணை முதல்வா் ஆரோக்கிய ரீனா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படும் என கல்விக் குழுமத் தலைவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com