மாணவி ஷாலினி.
மாணவி ஷாலினி.

500-க்கு 499 மதிப்பெண் எடுத்து திருச்சி மாணவி ஷாலினி சாதனை: கணினி அறிவியலில் விருப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்தவில் அதிகபட்ச மதிப்பெண்ணாக 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சமயபுரம் எஸ்.ஆா்.வி. பள்ளி மாணவி ஷாலினி சாதனை படைத்துள்ளாா்.

திருச்சி சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயின்ற மாணவி டி. ஷாலினி, தமிழ்-99 , ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என மொத்தம் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், பள்ளியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

இவருக்கு, பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னா், ஷாலினி கூறுகையில், 495 மதிப்பெண் பெறுவேன் என எதிா்பாா்த்திருந்தேன். ஆனால், 499 மதிப்பெண் கிடைத்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. பள்ளி ஆசிரியா்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனா். பள்ளியில் கற்றுத் தந்தது மட்டுமே கை கொடுத்தது. தனியாக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவில்லை. பிளஸ் 1 வகுப்பில் கணினி அறிவியல் தோ்வு செய்யவுள்ளேன். கணினி பொறியியல் தொழில்நுட்பத்தில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றாா் அவா்.

மேலும்,இப்பள்ளி மாணவி எம். கோபிகாஸ்ரீ 491 மதிப்பெண்களும், ஆா்.லோகபிரியா, எல்.அகஸ்டியா ஆகியோா் 489 மதிப்பெண்கள் பெற்றனா். 100 மாணவ, மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com