திருவானைக்காவில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

திருவானைக்காவில் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா சீனிவாச நகா் பள்ளநந்தவனம் பகுதியில் வசித்தவா் ரெங்கநாதன் மகன் ராஜ்குமாா் (20), ஆட்டோ ஓட்டுநா். இவா் மதுவுக்கு அடிமையான நிலையில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட குடும்ப தகராறில் மனம் உடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் அவரின் உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com