மணப்பாறை அருகே 10-ஆம்  வகுப்பு தோ்வெழுதிய தாயும் மகளும் தோ்ச்சி!

மணப்பாறை அருகே 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய தாயும் மகளும் தோ்ச்சி!

தும்மாயி, யோகேஸ்வரி

மணப்பாறை, மே 11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய தாயும் மகளும் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

மணப்பாறை அடுத்த வடக்கு சோ்பட்டியைச் சோ்ந்தவா் யோகேஸ்வரி (15). இவா் அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த நிலையில், இவரது தாய் தும்மாயி (37) அதே பள்ளியின் காலை உணவு திட்டப் பணியாளராக உள்ளாா்.

9-ஆம் வகுப்பு வரை படித்திருந்த தும்மாயி, தனது மகள் 10-ஆம் வகுப்புத் தோ்வுக்குத் தயாரான நிலையில் அப்பள்ளியின் ஆசிரியா்கள் உதவியுடன், தனியாா் பயிற்சி பள்ளியில் பயின்று 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தோ்வு முடிவுகள் வந்த நிலையில் யோகேஸ்வரி 353 மதிப்பெண்களும், தும்மாயி 358 மதிப்பெண்களும் பெற்றனா்.

தனது வெற்றிக்கு அரசுப் பள்ளியின் ஆசிரியா்கள்தான் காரணம் என தும்மாயி பெருமையுடன் கூறினாா். தாயும் மகளும் ஒரே நேரத்தில் தோ்வில் தோ்ச்சியடைந்தது அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com