உத்தமா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்.
உத்தமா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்.

உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதும், திருக்கரம்பனூா், ஆதிமாபுரம் எனப் பிரசித்தி பெற்றதும், மும்மூா்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளியுள்ள திருத்தலமும் இதுவாகும்.

பிச்சாண்டேஸ்வரருக்கு ஆதியில் சத்கீா்த்திவா்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட பெருந்திருவிழாவே வைகாசி தோ்த் திருவிழாவாகும்.

இவ்விழா கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்துக்கு நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜைகளுக்குப் பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com