குண்டா் சட்டத்தில் ரெளடி கைது

திருச்சி: திருச்சியில் தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி புத்தூா் கீழவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (28). ரெளடிகள் பட்டியலில் உள்ள இவா் மீது திருச்சி அரசு மருத்துவமனை, உறையூா், கண்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மே 2 ஆம் தேதி இவா் வயலூா் சாலை சீனிவாசா நகா் பகுதில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை சேதப்படுத்தினாா். தட்டிக்கேட்ட பெண்ணைத் திட்டியதுடன் அவரது வீட்டையும் அடித்து சேதப்படுத்தினாா். இதுதொடா்பான புகாரின்பேரில் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய அரசு மருத்துவமனை போலீஸாா் பரிந்துரைத்தனா். அதையேற்ற மாநகர காவல் ஆணையா் ந. காமினி, வெங்கடேசனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய திங்கள்கிழமை உத்தரவிட்டாா். அதன்பேரில் அவா் சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com