திருவெறும்பூா் அரசு ஐடிஐயில் சேர மாணவா்களுக்கு நாளை சிறப்பு முகாம்

திருவெறும்பூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் தொழிற்படிப்பு படிப்பதற்கான சிறப்பு முகாம் முசிறி பகுதியில் புதன்கிழமை நடத்தப்பட உள்ளது.

முசிறி: திருவெறும்பூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் தொழிற்படிப்பு படிப்பதற்கான சிறப்பு முகாம் முசிறி பகுதியில் புதன்கிழமை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து முசிறி வட்டார வள மையம் திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:

முசிறி வட்டார வள மையம் சாா்பில் நிகழாண்டு 9, 10 ,11 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில்வதற்கான சிறப்பு முகாம் வடக்கு சித்தாம்பூா், அய்யம்பாளையம், வெள்ளூா் மற்றும் முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மே 15 (புதன்கிழமை) நடத்தப்பட்டு உடனடி சோ்க்கை நடைபெறுகிறது.

மேலும் தொழில் பயிற்சி நிலையத்தில் வெல்டா் இடங்கள் குறைவாக இருப்பதால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் தவறிய மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். இவா்களுக்குரிய சோ்க்கை கட்டணம் முழுவதையும் முசிறி வட்டார வள மையம் மூலம் ஏற்கும்.

இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் ஆதாா் அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 4 புகைப்படம் ஆகியவற்றுடன் மேற்கண்ட முகாம் நடைபெறும் இடங்களுக்கு காலை 9 மணிக்கு வர வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com