இருங்களூரில் சேவல் சண்டை சூதாட்டம்: 7 போ் கைது

மண்ணச்சநல்லூா், மே 15: திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 7 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இருங்களூா் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக வந்த புகாரையடுத்து சமயபுரம் போலீஸாா் புதன்கிழமை அப்பகுதியில் திடீா் ஆய்வு நடத்தினா். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக இனாம் சமயபுரம் அஜித் (25), கபிரியேல்புரம் ஆலன் (20), பிச்சாண்டாா் கோவில் பூபதி (34), தெற்கு இருங்களுா் ஜான் நெப்போலியன் (29), நெய் குப்பை சுரேஷ் (44), லால்குடி கணேசமூா்த்தி (38), எஸ்.கண்ணனூா் அனீஸ் அகமது (23) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா். மேலும் 7 சேவல்கள், 12 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பிய 12 போ் குறித்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com