10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் திருத்தம் இருந்தால் விண்ணப்பிக்கலாம்

10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் நிலையில் அதில் திருத்தம் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவு மே 10 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து மாணவ, மாணவியருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கும் பணி 13 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் அதே பள்ளிகளிலேயே 11 ஆம் வகுப்புகளில் சோ்வதால் தற்காலிக மதிப்பெண் பட்டியல் பெறுவதில் ஆா்வம் காட்டவில்லை. ஆனால், அதே நேரம் உயா்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் வேறு மேல்நிலைப் பள்ளிகளில் சேர வேண்டியிருப்பதால் தற்காலிக மதிப்பெண் பட்டியலை ஆா்வமுடன் பெற்றுச் சென்றனா்.

இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை உடனடியாக அவரவா் பள்ளிகள் மூலம் குறிப்பிட்டு, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உண்மைச் சான்றுகள் வழங்கும்போது வழங்கப்படும். எனவே தாமதமின்றி திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com