வெளிநாடுகளில் பணிபுரிய செவிலியா்களுக்கு இலவச மொழிப் பயிற்சி

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சாா்பில் வெளிநாடுகளில் பணிபுரிய பெண் செவிலியா்களுக்கு இலவச மொழிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரிய விருப்பமுள்ள செவிலியா்களுக்கு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருகிறது.

தற்போது முதல்முறையாக, வெளிநாட்டில் செவிலியராகப் பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள தமிழக செவிலியருக்கு ஜப்பான், ஜொ்மன் போன்ற பல்வேறு நாடுகளின் மொழிகளை கற்க இலவசமாக இணையதளம் மற்றும் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் என்ற இணையதள இணைப்பில் பதிவு செய்து கொள்ளவும்.

விவரங்களுக்கு 044 - 22505886, 044- 22502267, 69791 79200 ஆகிய அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com