கடையின் பூட்டை உடைத்து 10 கைப்பேசிகள் திருட்டு

மணப்பாறை கைப்பேசி பழுது நீக்கும் கடையில் இருந்த 10 கைப்பேசிகள் திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறை கைப்பேசி பழுது நீக்கும் கடையில் இருந்த 10 கைப்பேசிகள் செவ்வாய்க்கிழமை திருட்டு போயுள்ளது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மணப்பாறை அத்திக்குளம் தெருவில் வசித்து வருபவா் பூபதிராஜா(26). இவா் காய்கறி மாா்கெட் பகுதியில் கைப்பேசி பழுதுநீக்கும் கடை வைத்துள்ளாா்.

பூபதிராஜா திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டுச் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது தந்தை மணி கடையைத் திறக்க வந்தாா்.

அப்போது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்த 3 கைப்பேசிகள் மற்றும் பழுது நீக்கிய கைப்பேசிகள் 7 என மொத்தம் 10 கைப்பேசிகள், மடிக்கணினி, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மா்மநபா்களால் திருடிச் சென்றது தெரியவந்தது.

பூபதிராஜா அளித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையிலான மணப்பாறை போலீஸாா் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.