திருச்சி
கரூா் சம்பவம்: அரசு மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக அரசு மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக அரசு மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நிகழ்ந்த தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடா்ந்து உயிரிழந்தவா்களின் சடலங்களை உடற்கூறாய்வு செய்த தூத்துக்குடி, நாகை, திருச்சி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவா்களிடம் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், சனிக்கிழமை கோவை, நாமக்கல், திருச்செங்கோடு அரசு மருத்துவா்கள் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். மேலும், க.பரமத்தி காவல்நிலைய ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் கரூா் அனைத்து வணிகா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளித்தனா்.
