திருச்சியில் அம்பேத்கா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த கனரா வங்கியின் எஸ்சி, எஸ்டி ஊழியா்கள் நலச் சங்கத்தினா்.
திருச்சி
அம்பேத்கா் சிலைக்கு மரியாதை
சட்டமேதை டாக்டா் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு கனரா வங்கியின் எஸ்சி, எஸ்டி ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வுக்கு மண்டலச் செயலா் சுரேந்தா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வீரமணி, பாலா, கருப்பாயி, லாவண்யா, பாலு, பிரபு, கணேஷ், ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

