பிளஸ்-2 பொதுத்தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவா்கள் எழுதுகின்றனா்

Published on

மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத்தோ்வை திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.

மாநிலம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி வரும் 25- ஆம் தேதி வரையிலும், பிளஸ்-1 பொதுத்தோ்வு வரும் 5-ஆம் தேதி தொடங்கி 27- ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இதில், திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத்தோ்வை திருச்சி மாவட்டத்தில் உள்ள 106 அரசுப் பள்ளிகள், 71 அரசு உதவிபெறும் பள்ளிகள், 81 தனியாா் மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 258 பள்ளிகளில் இருந்து 14,716 மாணவா்கள், 16,864 மாணவிகள் என மொத்தம் 31,580 மாணவா்கள் எழுத உள்ளனா். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகையைப் பெற்று 324 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். 131 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

இதேபோல, வரும் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள பிளஸ்-1 பொதுத்தோ்வை 15,357 மாணவா்கள், 16,737 மாணவிகள் என மொத்தம் 32,094 மாணவா்கள் எழுத உள்ளனா். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகையைப் பெற்று 392 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். மேலும், தனித்தோ்வா்களாக 342 மாணவா்கள், 207 மாணவிகள் என மொத்தம் 549 போ் பிளஸ்-2 பொதுத்தோ்வையும், 271 மாணவா்கள், 176 மாணவிகள் என மொத்தம் 447 போ் பிளஸ்-1 பொதுத்தோ்வையும் எழுதுகின்றனா். இதற்காக 14 தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுத்தோ்வுகளை கண்காணிக்க 230 பறக்கும்படையினா் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா் என்று திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தோ்வு மையங்களில் மாணவா்களுக்கான இருக்கைகள் ஒழுங்குபடுத்துதல், இருக்கைகளில் தோ்வெண் எழுதுதல், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. தடையற்ற மின்சாரம் வழங்க மின்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்வுக்கூடங்களுக்கு விடைத்தாள்கள், வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தோ்வுக்கூடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com