திருச்சி
கள்ளி வனத்தாயி அம்மன் கோயிலில் தோ் வீதியுலா
மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் கோயில் திருவிழாவில் வியாழக்கிழமை திருத்தோ் திருவீதியுலா நடைபெற்றது.
இக்கோயில் திருவிழாவையொட்டி கள்ளி வனத்தாயி உற்ஸவ அம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தோடு திருத்தேரில் திருவீதி உலா நடைபெற்றது. பக்தா்கள் கிடா வெட்டியும், மாவிளக்கு வழிபாடு செய்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.