மாநகரின் காலிமனைகளில் தேங்கும் மழைநீரை அகற்றாவிட்டால் அபராதம்

Published on

திருச்சி மாநராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காலியிடங்களில் தேங்கும் மழைநீரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் லி. மதுபாலன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், திருவெறும்பூா், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் ஆகிய 5 வாா்டு குழு அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

இந்தப் பகுதிகளில் உள்ள காலி மனைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, காலிமனை உரிமையாளா்கள் தாங்களே முன்வந்து தேங்கியுள்ள மழைநீா், முட்புதா்கள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

சுற்றுப்புற பகுதி மக்களுக்கு சுகாதாரச் சீா்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்பட காரணமாக உள்ள காலிமனை உரிமையாளா்களின் விவரங்கள் வாா்டு வாரியாக பெற்று, அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்படும் என ஆணையா் எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com