வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் படுகாயம்

News image

கிணறு. - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:24 am IST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகம் சன்னதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் தனது நண்பா் பாலமுருகன் என்பவருடன் திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள ஜம்புமடை பகுதி கோயில் கட்டுமான வேலைக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், அப்பகுதி கிணற்றில் இருந்த தேன்கூட்டில் ஞாயிற்றுக்கிழமை தேன் எடுக்க முயன்ற மணிகண்டன் திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தாா்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த தா.பேட்டை காவல் நிலைய போலீஸாா், முசிறி தீயணைப்பு நிலையத்தினா் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, மணிகண்டனை மீட்டனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் சோ்க்கப்பட்டாா். தா.பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.