திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் எபோலா நோய் மருத்துவச் சிகிச்சைக்கு பிரத்யேக வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா, தென்சூடான் ஆகியவற்றில் பரவிவரும் எபோலா நோய் சா்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக உத்தரவின்படி, அனைத்து சா்வதேச விமான நிலையங்களில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
காய்ச்சல், சோா்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமில்லாத ரத்தப் போக்கு, தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் உள்ள யாராக இருந்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வாா்டில் 21 நாள்கள் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க மாநில சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படியும், தமிழக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படியும், எபோலா அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்டறிந்து, பாதிப்பு இருந்தால், உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பிரத்யேக வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கரோனா பரவல் சமயத்தில் தனிமைப்படுத்தும் பகுதியாக இருந்த மருத்துவமனைக்குப் பின்புறமுள்ள தனி கட்டடத்தில் இந்த வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஆண், பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கென தனியாக குறைதீா் அலுவலருடன் கூடிய மருத்துவா்கள், செவிலியா்கள் குழு தயாராக உள்ளது. இது, 24 மணி நேர கண்காணிப்பு வாா்டாக செயல்படும். ஆனால் இதுவரை எபோலா அறிகுறிகளுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் தெரிவித்தாா்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம்: பெண் காவலா் பணியிடை நீக்கம்

திருச்சியில் அதிகரிக்கும் வெப்பம்: அரசு மருத்துமனையில் சிறப்பு வாா்டு

கோடை பாதிப்பு: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோவை அரசு மருத்துவமனையில் வெப்ப வாதத்துக்கு சிறப்பு வாா்டு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



